Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 21, 2017

பரிதாபமாக பலியான மனிதர்: மனிதாபிமானத்தை மரணிக்க வைத்த செல்போன் மோகம் !


மகாராஷ்டிராவில் விபத்தில் சிக்கி ரத்தக்காயங்களோடு உயிருக்குப் போராடிய நபரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லாமல், மக்கள் சுற்றி நின்று செல்போனில் வீடியோ மற்றும் போட்டோ எடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம் போஷாரி பகுதியில், நேற்று அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதியதில் சதிஷ் பிரபாகர் என்ற இளைஞர் பிரபாகர் பலத்த காயமடைந்தார். பின்னர், உயிருக்கு போராடியபடி விபத்தான இடத்திலேயே சாலையில் கிடந்துள்ளார்.

இந்தக் கோர விபத்தை நேரில் பார்த்த மக்கள், ரத்தவெள்ளத்தில் கிடக்கும் பிரபாகரை சுற்றி சூழ்ந்து நின்றுகொண்டு, தங்களின் மொபைல் போன்களில் போட்டோ வீடியோ எடுத்தபடி இருந்தனர். ரத்தவெள்ளத்தில் கிடப்பவரை பற்றி கமெண்ட் அடித்தபடி இருந்த மக்கள் அவரைக் காப்பாற்ற முன்வரவில்லை.

இதனிடையே அவ்வழியாக சென்ற கார்த்திக்ராஜ் கதே என்ற பல் மருத்துவர், பிரபாகரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது போகும் வழியில் அவர், உயிருக்குப் போராடிய பிரபாகருக்கு, முதல் உதவி சிகிச்சை அளித்தார்.

இருப்பினும் சிறிது நேரத்தில் பிரபாகர் பரிதாபமாக மரணமடைந்தார். ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த மனிதரைக் கூட காப்பாற்றாமல் மொபைல் பைத்தியங்களாக இருந்துள்ள மக்களை நினைத்தால் மிகவும் கோபமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.