Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 11, 2017

கைதான திலீப்புடன் படம் எடுத்த போலீஸ்... செல்ஃபி ஆப் தி இயர்!!


பாவனா கடத்தல், பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கைதான நடிகர் திலீப்புடன் போலீசார் எடுத்த செல்ஃபி வைரலாகப் பரவி வருகிறது.

பாவனா வழக்கில் நேற்று மாலை கைது செய்யப்பட்டார் பிரபல நடிகர் திலீப். அவரைக் கைது செய்த போலீஸ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியது. அப்போது உடன் வந்த போலீசார் இருவர் திலீப்புடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். திலீப்பும் மறுப்பு சொல்லாமல் சோகப் புன்னகையுடன் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் திலீப்பும்.

இந்த செல்ஃபி படம்தான் இப்போது வலைத் தளங்களில் வைரலாக வலம் வருகிறது. இன்னொரு பக்கம், 'அவரே பிரச்சினையில் இருக்கிறார். அவர் மனநிலை புரியாமல் ஒரு காட்சிப் பொருள் போல நிறுத்தி செல்ஃபி எடுப்பது என்ன மாதிரி மனநிலை' என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.