July 6, 2017
சமூகவலைத்தள பொய் பிரசாரத்தில் மோடி பக்தர்கள் முதலிடம் - ஆய்வில் தகவல் !
2016 அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு பின்னர் தான் போலியான தகவல்கள் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகின்றன. தி நியூ யார்க் டைம்ஸ் , சி.என்.என்., என்.பி.சி நியூஸ், தி வால் ஸ்டிரீட் ஜெர்னல் போன்ற நாளிதழ்களில் வெளிவரும் செய்திகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப போலியான தகவல்கள் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் பரவ ஆரம்பித்து இருப்பதாக ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. இது அமெரிக்காவோடு மட்டும் நின்றுவிடாமல், மற்ற நாடுகளிலும் அரங்கேறியுள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனம், சமூக வலைதளம் போன்றவற்றில் மிக பெரிய சந்தையை கொண்டுள்ள இந்தியாவில் 16 கோடி பேர் வாட்ஸ் அப், 14.8 கோடி பேர் பேஸ்புக்,2.2 கோடி போர் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அமெரிக்காவை போல இந்தியாவிலும் மக்களை திசை திருப்புவதற்காக கடந்த 2016 ஆம் ஆண்டில் உப்பு முதல் ரூபாய் நோட்டு வரை பல போலியான தகவல்கள் யுனெஸ்கோ மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி பெயரில் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
அவற்றில் சில,
1. மோடி சிறந்த பிரதமராக யுனெஸ்கோ-வால் தேர்வு
2016 ஜூன் மாதத்தில் வாட்ஸ்அப் மற்றும் பிற இணைய தளங்களில், ஐ.நா. கலாச்சார நிறுவனம் , உலகின் சிறந்த பிரதமராக , இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவித்துள்ளது என்ற பொய்யான தகவல்கள் பரவின.
2. ஜன கன மன – உலகின் சிறந்த தேசிய கீதமாக யுனெஸ்கோ-வால் தேர்வு
இந்திய தேசிய கீதமான ஜன கன மன உலகின் சிறந்த தேசிய கீதமாக யுனெஸ்கோ-வால் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் 2008 ஆம் ஆண்டு இமெயில் மூலமாக வேகமாக பரவியது. இது ஐ.நா.வின் பார்வைக்கு சென்றதையடுத்து, யுனெஸ்கோ அதிகாரி ஒருவர் 2008 ஆம் ஆண்டு இந்தியா டுடே நாளிதழுக்கு அளித்த பேட்டியில் , இந்திய இணையதளங்களில், ஜன கன மன உலகின் சிறந்த தேசிய கீதமாக யுனெஸ்கோ-வால் தேர்வு செய்யப்பட்டுள்ளது என வேகமாக பரவி வருகிறது. ஆனால் இந்திய தேசிய கீதத்தை பற்றியோ, அல்லது வேறு நாடுகளின் தேசிய கீதம் பற்றியோ நாங்கள் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என கூறியுள்ளார்.
3. 2000 ரூபாய் நோட்டு – உலகின் சிறந்த ரூபாய் நோட்டாக யுனெஸ்கோ-வால் தேர்வு
2000 ரூபாய் நோட்டு உலகின் சிறந்த ரூபாய் நோட்டாக யுனெஸ்கோவின் கலாச்சார விழிப்புணர்வு துறை தலைவர் டாக்டர். சவுராப் முகர்ஜி கூறியதாக ஒரு பொய்யான தகவல் வாட்ஸ் அப்-களில் மகிழ்ச்சி இமோஜி-களுடன் வேகமாக பரவி வருகிறது என பிபிசி தெரிவித்திருந்தது.
4. கறுப்பு பணத்தை கண்டறிய புதிய ரூபாய் நோட்டுகளில் ஜிபிஎஸ் சிப்
நவம்பர் 8, 2016 ரூ.500 , ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்த 1 மணி நேரத்திற்குள்ளாகவே, கறுப்பு பணத்தை கண்டறிவதற்காக புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுகளில் நானோ ஜிபிஎஸ் சிப் பொருத்தப்பட்டுள்ளது என தகவல்கள் வாட்ஸ்அப்-பில். மேலும் இந்த சிப் கறுப்பு பணம் முடக்கப்படுவதை அதிகாரிகளுக்கு தெரிவிக்கும். இது சிக்னல்கள் பிரதிபலிப்பானாக செயல்படும். பணம் இருக்கும் இடம் குறித்து செயற்கைக்கோள் மூலமாக சிக்னல் அனுப்பினால், பணம் இருக்கும் இடம் , ரூபாய் நோட்டின் சீரியல் எண் போன்ற தகவல்களை அதிகாரிகளுக்கு இந்த நானோ ஜிபிஎஸ் சிப் அனுப்பும். நிலத்திற்கு கீழ் 120 மீட்டர் ஆழத்தில் பணம் வைக்கப்பட்டிருந்தாலும், இது சிறப்பாக செயல்படும். ரூபாய் நோட்டை சேதப்படுத்தாமல் இந்த சிப்-பை சிதைக்கவோ , அகற்றவோ முடியாது என்ற தகவல்கள் பரவியதாக Firstpost செய்தி வெளியிட்டிருந்தது.
மறைக்கப்பட்ட படங்கள், வண்ண ஸ்ட்ரைப்புகள், வாட்டர்மார்க் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் தான் 2000 ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. நானோ ஜிபிஎஸ் சிப்-கள் எதுவும் பொருத்தப்படவில்லை என ரிசர்வ் வங்கி கூறியதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டிருந்தது.
5. புதிய ரூபாய் நோட்டுகளில் கதிரியக்க மை ( radioactive ink) உள்ளது
புதிய ரூ.2000 , ரூ.500 நோட்டுகளை அச்சிடுவதற்காக ரிசர்வ் வங்கி கதிரியக்க மை பயன்படுத்தி வருகிறது. இதில் 15 புரோட்டான்கள் மற்றும் 17 நியூட்ரான்கள் கொண்ட பாஸ்பரஸ்(32) கதிரியக்க ஐசோடோப்புகள் உள்ளது. ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிக அளவிலான பணம் பயன்படுத்துகிறது என்பதை வருமான வரித்துறையினர் இந்த ஐசோடோப்புகள் மூலம் கண்டறிகின்றனர். இந்த கதிரியக்க ஐசோடாப்புகள் மனிதர்களுக்கு எந்த விதமான தீங்கையும் விளைவிக்காது என செய்தி பரவி வருவதாக Firstpost கூறியது.
ரூபாய் நோட்டுகள் தொடர்பான வதந்திகளை நம்பி சில வங்கிகள் கூட, டிவிட்டர் பக்கத்தில் இந்த வதந்திகளை வெளியிட்டது.
6. வாட்ஸ்அப் சுயவிவர புகைப்படம் (WatsApp Profile Picture) தீவிரவாத நடவடிக்கைகளுக்காக ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தால் பயன்படுத்தப்படலாம்
வாட்ஸ்அப் சுயவிவர புகைப்படங்களை தீவிரவாத நடவடிக்கைகளுக்காக சிரியா மற்றும் ஈராக் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தால் பயன்படுத்தப்படலாம். அதனால் அனைத்து தாய்மார்களும் , தங்கைமார்களும் தங்களது புகைப்படங்களை உடனடியாக அழித்திட வேண்டும். மேலும் இதன் மூலம் அவர்கள் உங்களின் சுய விவரங்கள், தனிப்பட்ட அடையாளங்கள் மிக எளிதாக திருட முடியும். இது தொடர்பாக வாட்ஸ்அப் தலைமை நிர்வாக அதிகாரி 20 – 25 நாட்கள் இதை செய்ய வேண்டும். அதற்குள் வாட்ஸ்அப்-பின் பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்படும் என கூறினார் என்பது போல, தில்லி காவல் ஆணையர் ஏ.கே.மிட்டல் கூறியதாக வாட்ஸ்அப்-பில் வதந்திகள் பரவின.
7. ரூ.10 நாணயம் செல்லாது என ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ஜூன் 2016 ரிசர்வ் வங்கி புதிய ரூ.10 நாணயத்தை அறிமுகப்படுத்திய போது , பழைய நாணயங்கள் செல்லாது என வாட்ஸ்அப்-பில் வதந்திகள் பரவியது. மேலும் ஒரே மதிப்பில் இரண்டு விதமான நாணயங்கள் இருப்பதால் ரிசர்வ் வங்கி ரூ.10 நாணயங்களை தடை செய்து விட்டது என குறிப்பாக தில்லி, ஆக்ரா, மீரட் பகுதிகளில் வேகமாக பரவியது. இதையடுத்து , வணிகர்கள் ரூ.10 நாணயத்தை வாங்க மறுத்தனர். பின்னர் இது பற்றி அறிந்த ரிசர் வங்கி, ரூ.10 நாணயம் தடை செய்யப்படவில்லை. இதை வாங்காத வணிகர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியது.
8. ஜெயலலிதாவின் ரகசிய மகளும் வாரிசுமுமானவர் அமெரிக்காவில் உள்ளார்
முன்னால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் ஜெயலலிதாவின் ரகசிய மகளும் வாரிசுமுமானவர் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார் என கூறி ஒரு பெண்ணின் புகைப்படம் வாட்ஸ் அப்-பிலும் மற்ற சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவியது. இது பார்த்த பாடகி சின்மயி, ஜெயலலிதாவின் ரகசிய மகள் என கூறப்படுபவர் , மிருதங்க வித்வான் வி.பாலாஜி-யின் குடும்பத்தை சேர்ந்தவர். அவர் தற்போது ஆஸ்திரேலியாவில் வாழ்ந்து வருகிறார். இவர் ஜெயலலிதாவின் மகள் அல்ல என கூறி இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் இசையமைப்பாளர் திருவனந்தபுரம் வி.பாலாஜி என்பவர், ஜெயலலிதாவின் ரகசிய மகள் என பரவி வரும் புகைப்படத்தில் இருப்பவர் எனது மைத்துனி என கூறியிருந்தார்.
9. இந்தியாவில் உப்பு பற்றாக்குறை
இந்தியாவில் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என பரவிய வாட்ச் அப் வதந்தியால் மகாராஷ்டிரா, தில்லி, உத்தர பிரதேச மாநில மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக இப்பகுதிகளில் உப்பின் விலை 4 மடங்காக உயர்ந்தது. கான்பூரில் உப்பு வாங்க ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து நுகர்வோர் விவகாரங்கள் துறை அதிகாரிகள், நாங்கள் 22 பொருட்களின் விலை தினமும் கண்காணித்து வருகிறோம். நாடு முழுவதிலும் இருந்த எங்களுக்கு வந்த தகவல் படி உப்பின் விலை அதிகரிக்கவில்லை என கூறினர்.
கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மோடி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிடிக்காதவர்கள் தான் நாட்டில் இது போன்ற பல்வேறு வதந்திகளை பரப்பி வருகின்றனர் என கூறினார்.
10. நேருவின் ஆட்சி ஆலமரம் போன்றது : மார்க் தூலி
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர் லால் நேருவின் ஆட்சி ஆலமரம் போன்றது. ஆலமரத்தின் கீழ் எதுவும் வளர முடியாது என கூறி பிபிசி இந்தியாவின் தலைவர் மார்க் தூலி மோடி அரசுக்கு ஆதரவு அளித்தார் என பேஸ்புக்-கில் பரவியது. மேலும் கடந்த வருடங்களில் தாத்ரி, கண்ணையா , ஓவேசி போன்றவர்களை பார்த்து விட்டோம். இதை எல்லாம் நாம் கடந்து போவோம் என தூலி , புதிய புத்தகத்தை எழுதும் போது விவாதித்தார் எனவும் வதந்திகள் பரவியது. இது தொடர்பாக தூலி, இது உண்மையல்ல என தெரிந்தும், அதை உறுதி படுத்துவதற்காக சிலர் என்னிடம் கேட்கின்றனர். இதில் உண்மை என்னவென்றால், இது போன்ற பொய்யான பிரசாரங்கள் மக்கள் மனதில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுகிறது என்பது தான். இந்த அறிக்கை அதிகம் நம்பகத்தன்மையுடனும், குறைந்த அபத்தமானதுவும் மாக இருந்திருந்தால் எனது நம்பகத்தன்மை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் என்றார்.
சமூகவலைத்தள பொய் பிரசாரத்தில் மோடி பக்தர்கள் முதலிடம் - ஆய்வில் தகவல் !
Reviewed by Admin
on
July 06, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.