Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 11, 2017

நான்கு ஆண்டுகளுக்கு அதிமுக ஆட்சியே நீடிக்குமாம்.. சொல்கிறார் பாஜக இல.கணேசன்


தமிழகத்தில் அதிமுக ஆட்சி 4 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும். அதற்கு பாஜக ஒருபோதும் தடையாக இருக்காது என அக்கட்சியின் எம்.பி.யும் மூத்த தலைவருமான இல. கணேசன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் பாஜக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார் இல.கணேசன். அதன் ஒரு பகுதியாக நேற்று வேலூர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது கட்சி நிர்வாகிகளிடையே பேசிய அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சி 4 ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும். அதற்கு பாஜக தடையாக இருக்காது. தமிழகத்தில் 'நீட்' தேர்வு நடப்பதற்கும், அதனை தடை செய்வதற்கும் தமிழக அரசு தான் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மாணவர்கள் அறிவாளியாக உள்ளனர். இதற்கு உதாரணம் பல்வேறு மாநிலங்களில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் அதிகாரி பணியில் உள்ளனர். மத்திய அரசு அறிவித்தபடி 2022-ம் ஆண்டில் அனைவருக்கும் வீடு திட்டம் நிறைவேற்றப்படும். தற்போது தமிழகத்தில் குற்றம் குறைந்து, விபத்து அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் டாஸ்மாக் கடைகள் தான் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.