July 13, 2017
என்னா உதை: அடடா இவர்கள் அல்லவா ரியல் ஹீரோக்கள் ! வீடியோ
அசர்பைஜான் நாட்டில் தீப்பிடித்த காரில் சென்ற பயணிகளை முதியவர் ஒருவர் தைரியமாக அருகில் சென்று மீட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அசர்பைஜான் நாட்டில் கார் ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது அந்த காரின் பின்னால் மற்றொரு கார் மோதியது.
இதில், முன்னால் சென்ற காரில் தீப்பிடித்தது. இதனால் காரில் இருந்தவர்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர்.
கார் தீப்பிடித்து எரிந்ததால் காப்பாற்ற சென்றவர்கள் அஞ்சி ஓடினர். அப்போது முதியவர் ஒரு தைரியமாக அருகில் சென்று காரில் இருந்தவர்களை காப்பாற்ற முயன்றார்.
ஆனால் கதவு திறக்காததால் திணறிய அவர் ஓங்கி ஒரு உதைவிட்டார். ஜன்னல் கண்ணாடி நொறுங்கியது. இதையடுத்து உள்ளே இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.
இதேபோல் காரின் மற்ற பக்கங்களின் வழியாகவும் சிலர் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இந்த வீடியோக்காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வீடியோவை பார்க்கும் மக்கள் அந்த நபருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
என்னா உதை: அடடா இவர்கள் அல்லவா ரியல் ஹீரோக்கள் ! வீடியோ
Reviewed by Admin
on
July 13, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.