July 13, 2017
முடிக்கு (மயிருக்கு) வந்த மவுசைப் பார்த்தீர்களா; இனிமேல் அதைக் வெட்டிவிடாதீர்கள் !
தலையில் இருக்கும்வரைதான் தலை மயிருக்கு மதிப்பு என்பார்கள். ஒருவருக்கு மேலதிக அழகைக் கொடுப்பதுவும் இந்த தலைமயிர் தான். இதற்காக தலைமுடியை அதிக சிரத்தை எடுத்து பராமரிப்பதும் வெவ்வேறான அலங்காரங்களில் அதனை மாற்றிக்கொள்வதும் பன்னெடுங்காலமாக இருந்துவருகின்றது.
ஆனால் இவ்வளவு கவனிப்போடு பார்க்கப்பட்ட தலை மயிர் தலையிலிருந்து உதிர்ந்ததும் அதனை அருவருப்பாகவே நோக்குகிறோம். திருவள்ளுவர் கூட “தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர் நிலையின் இழிந்தக் கடை” என்று மனிதப் பண்புகள் இல்லாதவர்களை உதிர்ந்த தலை மயிருக்கே ஒப்பிட்டார்.
இவ்வாறான உதிர்ந்த தலை மயிரால் எதுவித பிரியோசனமும் இல்லை என்று அதனை நம்மிலிருந்து தொலைவில் தீண்டத்தகாத பொருளாக தள்ளிவைக்கிறோம்.
ஆனால் மனித தலைமுடியால் சுற்றாடலுக்கு உகந்த அரிய வேலை ஒன்றைச் செய்யமுடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அது என்ன என்பதைப் பார்ப்போம்,
அவுஸ்திரேலிய நாட்டின் University of Technology Sydneyயைச் சேர்ந்த Rebecca Pagnucco என்பவர் எண்ணெய்க் கசிவுகளை அகற்ற என்ன மூலாதாரத்தை பயன்படுத்தலாம் என ஆராய்ந்து அதற்கு தலைமுடியே சிறந்ததென கண்டுபிடித்துள்ளார்.
உலகில் பல்வேறுபட்ட சந்தர்ப்பங்களில் நிகழுக்கூடிய எண்ணெய்க் கசிவுகளை அகற்றுவதற்கு இதுவரை செயற்கை பொருட்களே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்தப் புதிய கண்டுபிடிப்பானது வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவரது ஆய்வின் முடிவின்படி தலை மயிரானது அதன் எடையைவிட ஒன்பது மடங்கு எடைகொண்ட எண்ணெயினை அகத்துறுஞ்சக்கூடியது என்பது நிரூபணமாகியுள்ளது!
முடிக்கு (மயிருக்கு) வந்த மவுசைப் பார்த்தீர்களா; இனிமேல் அதைக் வெட்டிவிடாதீர்கள் !
Reviewed by Admin
on
July 13, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.