Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 10, 2017

இவர் யார்: ரயில் நிலையத்தில் திடீர் "சுகாதார ஆய்வாளராக" மாறியவர் !


பொது இடங்களில் விற்கப்படும் உணவு தரமானதா இல்லையா கண்டறிய சுகாதார துறையினரும், அதை வாங்கும் நுகர்வோரும் சுவைத்து பார்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறுங்க.

பல ஆயிரம் செலவு செய்து உணவு பரிசோதனைக் கூடங்களில் கொடுத்து சோதனை செய்ய வேண்டும் என்றாலும் அதெல்லாம் வேஸ்டுங்க.

நாம் மேல்நிலை பள்ளிகளில் படிக்கும் போது உயிரியல் பாடத்தில் நாம் சோதனைக்கு உட்படுத்தும் அதே எலியை கொண்டும் சோதனை செய்யலாம் என்பதை உணர்த்தும் படம் ஒன்று வாட்ஸ் ஆப்பில் வைரலாகி வருகிறது.

ஈரோடு ரயில் நிலையத்தில் உணவு பொட்டலங்களுடன் காத்து கிடக்கிறார் ஒரு வியாபாரி. அந்த சமயம் பார்த்து எலியானது உணவை ருசித்து சோதனை செய்கிறது. நல்ல வேளை நாம் தப்பிச்சோம்டா சாமி..... இந்த லட்சணத்தில் சூடானது, சுவையானது என கூவி கூவி அழைப்பது வேறு....

என்ன எலியாரே ஒரு பாக்கெட் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது புரிகிறதா?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.