July 10, 2017
கதிராமங்கலத்தை ஆயிரக்கணக்கானோருடன் முற்றுகையிட்ட நெடுமாறன், வைகோ, வேல்முருகன்!
கச்சா எண்ணெய் எடுக்கும் பணியை நிறுத்தக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று நெடுமாறன், வைகோ, வேல்முருகன் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுடன் புறப்பட்ட பேரணி கதிராமங்கலத்தை அடைந்தது. அங்கு தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
கும்பகோணம் அடுத்த கதிராமங்கலத்தில் 7 இடங்களில் எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 30-ஆம் தேதி எண்ணெய் கிணறு அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது.
இதனால் பதற்றமடைந்த கிராமத்தினர் சம்பவ இடத்தில் குவிந்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும், 9 பேரை கைது செய்தனர்.
இதையடுத்து, கைது செய்தவர்களை விடுவிக்க கோரி கதிராமங்கலத்தில் கடந்த 3-ஆம் தேதி முதல் கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து உடைப்பு ஏற்பட்ட ஆழ்துளை கிணற்றை முற்றுகையிட வந்த 75 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரி அப்பகுதி மக்கள், வணிகர்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மக்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிக்க கோரி ராமாபுரத்தில் இருந்து கதிராமங்கலம் நோக்கி அனைத்துக் கட்சியினர் பேரணி சென்றனர்.
இந்த பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், மணியரசன், பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் சென்றனர். கதிராமங்கலத்தை முற்றுகையிட்டு தற்போது போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த பேரணியில், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டும். கதிராமங்கலத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி கைதானவர்களை உடனே விடுவிக்க வேண்டும். காவிரி டெல்டாவை விட்டு ஓஎன்ஜிசி உடனடியாக வெளியேற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
கதிராமங்கலத்தை ஆயிரக்கணக்கானோருடன் முற்றுகையிட்ட நெடுமாறன், வைகோ, வேல்முருகன்!
Reviewed by Admin
on
July 10, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 10, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.