July 4, 2017
காய்ச்சல், வயிற்று வலி காரணமாக சபாநாயகர் தனபால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி ! ஸ்டார்ட் மியூசிக் !!
தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீரென காய்ச்சல் மற்றும் வயிற்று வலி காரணமாக சபாநாயகர் தனபால் இன்று காலை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது மருத்துவர்கள் சிகிச்சை அளித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இவருக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு சிகிச்சை மருத்துவர்கள் அளித்து கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் அவருக்கு உடல்நலம் நன்றாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மருத்துவமனைக்கு சென்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக சட்டப்பேரவையில் நிகழ்வுகள் தொடர்ந்து கொண்டு வருகின்றன. இன்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடனான விவாதாம் மற்றும் வாக்குகெடுப்பு நடக்க இருக்கிறது.
மேலும் குட்கா விவகாரம் பெரிதளவில் திமுக வலியுறுத்திய நிலையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சபாநாயகரை பொறுத்தவரை, பல்வேறு நிகழ்வுகளில் உறுதியான முடிவுகளை எடுப்பார்.
அவர் மீதும் பல்வேறு விமர்சனங்களை திமுக வைத்துக் கொண்டிருந்த நிலையில், இந்த மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதைப் பொறுத்தவரை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இருக்கிறார். அதை தவிர்த்தும் கூட மாற்றுத் தலைவர்கள் இருப்பதால் சட்டப்பேரவை நிகழ்வை பொறுத்தவரை பெரும் அளவில் பிரச்சனை ஏதும் இல்லை.
தற்போது சபாநாயகர் தனபாலுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்று பார்க்கலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது. சபாநாயகர் தனபாலின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் இன்னும் 1 அல்லது 2 மணி நேரத்தில் முழுமையான தகவலை வெளியிடுவார்கள் என்றும், அதனையடுத்து அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
காய்ச்சல், வயிற்று வலி காரணமாக சபாநாயகர் தனபால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி ! ஸ்டார்ட் மியூசிக் !!
Reviewed by Admin
on
July 04, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.