Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 18, 2017

பயிர்கள் கருகியதால் விவசாயி தீக்குளித்து தற்கொலை.. திருச்சியில் சோகம்


பயிர்கள் கருகியதால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து வருகிறது. திருச்சி அருகில் இன்று விவசாயி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ளது அத்வத்தூர் கொய்யாத்தோப்பு கிராமம். இந்த கிராமத்தில் வாழ்ந்த விவசாயி கணேசன், காவிரி நீர் இல்லை என்றாலும் கிணற்று நீரை நம்பி தனது நிலத்தில் விவசாயம் செய்துள்ளார்.

இந்நிலையில், கிணற்றிலும் நீர் வற்றி காய்ந்துவிட்டது. இதனால் பயிர்கள் நீரின்றி கருகியது. இதனால் மனம் உடைந்து கணேசன் காணப்பட்டார். விவசாயம் பொய்த்துப் போன நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த கணேசன், மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயி கணேசன் தற்கொலை குறித்து சோமரசம்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்வது தொடர்ந்து வருகிறது. 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். இதனை தடுக்கவும் உரிய முறையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் தொடர்ந்து கோரி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.