Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2017

மத்திய பிரதேச காவல்துறை: தக்காளி விலையேற்றம் மக்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் பெரும் தலைவலி !


தக்காளியின் விலை நாடு முழுவதும் கிலோ ரூ.100-ஐ தாண்டி விற்பனையாகும் நிலையில், தக்காளிப் பெட்டிகளை கொண்டு வரும் வாகனங்களுக்கும், கடைகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த அசாதாரண நிகழ்வு மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தங்கம் போன்ற விலை உயர்ந்த பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு தான் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவதை கேள்விபட்டிருப்போம்.

விலை அதிகமானதால் அங்கு தக்காளிகள் கொள்ளையடிக்கப்படுவது சர்வ சாதாரணமாக அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க போலீஸ் பாதுகாப்பு கோரியதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இது பற்றி செய்தியாளரிடம் பேசிய சுபாஷ் நரங் என்ற தக்காளி விற்பனையாளர், முன்னர் வெங்காயத்திற்கு ஏற்பட்ட தட்டுப்பாடு போல தற்போது தக்காளிக்கு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

கடைகளில் தக்காளிகளை களவாடும் சம்பவங்கள் அதிகரித்து விட்டதாக கூறினார்.  இதனால் தான் தக்காளி விற்பனை செய்யும் கடைகளில் காவல்துறை பாதுகாப்பு கோரப்பட்டதாகவும் விளக்கமளித்தார். விற்பனையின் போதும், தக்காளி சேமிப்பு கிடங்குகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தக்காளி விலையேற்றம் மக்களுக்கு மட்டுமல்ல, தங்களுக்கும் பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி பேசிய இந்தூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் சாவ்தியா, தக்காளி களவு மற்றும் அதனால் நேரக் கூடிய அசம்பாவிதங்களை தடுக்கவே துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். விற்பனை நேரத்திலும், இரவு நேரத்தில் சேமிப்பு கிடங்கிலும் தக்காளி கொள்ளையில் சிலர் ஈடுபடுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனை தடுக்கும் விதமாகவே வியாபாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

தக்காளி விலை உயர்வால் எங்களுக்கம் தலைவலி தான் என்றார். தக்காளி சாகுபடி செய்யப்படும் மாநிலங்களில் நிலவும் மோசமான வானிலை காரணமாக பருவத்தில் தக்காளி பவரலாக பயிரிடப்படவில்லை. விளைச்சல் சரிந்து விட்டதால் பல்வேறு மாநிலங்களில் தக்காளி விலை கிலோ ரூ.100-ஐ தாண்டி விட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.