July 1, 2017
இணையத்தில் கலக்கும் தமிழ் டாடி: பீட்சா முதல் பிரியாணி வரை அத்தனையும் கிராமத்து ஸ்டைலில் !
கிராமிய உணவு வகைகளை சமைத்துக் காட்டி, யூடியூப் வழியே இந்திய உணவுப் பிரியர்களை வெகுவாக வசீகரித்து வருகிறார் திருப்பூரைச் சேர்ந்த ஆறுமுகம்.
இணையப் புரட்சியால் நடந்திருக்கும் நல்ல விஷயம் என்னவென்றால், நாம் இருந்த இடத்தில் இருந்தே லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்பது தான். ஆனால் அதற்கு அழகு முக்கியமல்ல, திறமை இருந்தாலே போதும் என்பதற்கான முன் உதாரணம் தான் ஆறுமுகம்.
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரைச் சேர்ந்த ஆறுமுகத்துடன் பிறந்தவர்கள் 12 பேர். படிப்பறிவு அவ்வளவாக இல்லாவிட்டாலும் அனுபவத்தில் அனைத்தையும் கற்ற ஆறுமுகம் ஏறத்தாழ 18 மொழிகளை அறிந்தவர். ஜவுளி வியாபாரியாகவும் இருந்து வந்த ஆறுமுகம், தற்போது பெயின்டராக பணியாற்றி வருகிறார்.
ஆறுமுகத்தின் உறவினர்களிடையே பெரிய அளவில் மதிப்பு இல்லை. இதனால் அவரைப் பெருமைப்படுத்துவதற்காக ஆறுமுகத்தின் மகன் கோபிநாத் எடுத்த முயற்சியால் இன்று உலகம் முழுவதும் பிரபலமடைந்துள்ளார் தமிழ் ‘டாடி'.
ஆறுமுகம் - செல்வி தம்பதியின் முதல் மகன் கோபிநாத். பொறியியல் படிப்பை முடித்து விட்டு சென்னையில் திரையுலகில் இரண்டு ஆண்டுகள் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். திரைத்துறை பெரிய அளவில் கைகொடுக்காததால் வருமானத்திற்காக இவர் 'தமிழ் ஃபாக்டரி' தொடங்கினார். ஆனால் அதுவும் கைகொடுக்காததால், புதிதாகத் தனது குடும்பத்தினரை வைத்துத் துவங்கிய இரண்டாவது யூடியூப் சேனல்தான் 'வில்லேஜ் ஃபுட் ஃபாக்டரி'.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த சேனல் துவங்கப்பட்ட இந்த சேனலில் தாய் செல்வியின் சமையலை பிரபலப்படுத்த விரும்பினாலும் எதேச்சையாக எடுத்த தந்தையின் வீடியோ உயிரூட்டத்துடன் இருந்ததால் அவரையே கதாநாயகனாக ஃபிக்ஸ் செய்தார் கோபிநாத். வில்லேஜ் ஃபூட் ஃபாக்டரி சானலில் வரும் அனைத்து வீடியோக்களிலும் கிராமிய உணவைச் சமைத்து அனைவரின் நாவிலும் செய்முறையிலேயே நாவில் எச்சிலூர வைக்கிறார் ஆறுமுகம்.
தொடக்க காலத்தில் பெரிதாக வரவேற்பு இல்லாவிட்டாலும் இன்று சுமார் 5 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர் இந்த யூடியூப் சேனலை. தற்போது வரை 93 சீமையல் வீடியோக்கள் இதில் இடம்பெற்றிருக்கிறது.
இயற்கைச் சூழலில், இயற்கையான பொருட்களைக் கொண்டு வெறும் கல் வைத்து மூட்டிய அடுப்பில் விறகு குச்சிகளை வைத்து சமைக்கிறார் இந்த அனுபவ செஃப் ஆறுமுகம். மாதா மாதம் பின்தொடர்வோரின் எண்ணிக்கை 60 ஆயிரம் வரை அதிகரிப்பதால் சுமார் 2 லட்சம் வரை சம்பாதிப்பதாக கூறுகிறார் கோபிநாத்.
100 கோழிக் கால்கள் கிரேவி மற்றும் 300 முட்டை பொடிமாஸ். 500 நண்டு குழம்பு, முழு ஆட்டுக்கறி, பெரிய கோலா மீன் சமையல், பீட்சா என பிரம்மாண்ட சமையலை செய்கிறார் தமிழ் டாடி. வில்லேஜ் ஃபுட் பேக்டரி யூ டியூப் சேனலின் பிரபலத்தை பார்த்து பலரும் விளம்பரம் கொடுக்க முன் வந்தாலும், அதனை தட்டிக் கழித்துள்ளார் கோபிநாத்.
இணையத்தில் கலக்கும் தமிழ் டாடி: பீட்சா முதல் பிரியாணி வரை அத்தனையும் கிராமத்து ஸ்டைலில் !
Reviewed by Admin
on
July 01, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 01, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.