Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 20, 2017

மாயாவதியின் ராஜினாமா கடிதம் ஏற்பு: ராஜ்யசபா எம்.பி. பதவி !


பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியின் ராஜ்யசபா எம்.பி.பதவி ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுவிட்டது.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கடந்த செவ்வாய்க்கிழமை தலித்துகள் மீதான தாக்குதல் குறித்து பேசுவதற்கு மாயாவதி முற்பட்டார். அப்போது மாநிலங்களவை துணை தலைவர் குரியன் அவருக்கு பேச அனுமதி வழங்கவில்லை.

இதைத் தொடர்ந்து தலித்துகள் மீது தாக்குதல் குறித்து பேசுவதற்கு அனுமதிக்கவில்லை எனில், தன் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அன்றைய தினம் மாலையே ராஜினாமா கடிதத்தை ராஜ்யசபா தலைவர் ஹமீது அன்சாரியை சந்தித்து அளித்தார். இந்நிலையில் இன்று ஹமீது அன்சாரியை மாயாவதி நேரில் சந்தித்தார்.

பின்னர் தன் கைப்பட எழுதிய 2-ஆவது ராஜினாமா கடிதத்தை அவரிடம் மாயாவதி வழங்கினார். இதைத் தொடர்ந்து அவரது ராஜினாமா ராஜ்யசபாவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.