Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 17, 2017

கதிராமங்கலத்தில் கைது செய்தவர்களை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் !


கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் ஒ.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சில நாட்களுக்கு முன் நடந்த போராட்டத்தின் போது, ஊர்மக்களில் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள பத்து பேரையும் விடுக்க வேண்டும் எனவும் ஒன்.என்.ஜி.சி நிறுவனம் வெளியேற வேண்டும் எனவும் கூறி பொதுமக்கள் ஊர் பொது இடத்தில் கூடி விறகு அடுப்பில் சமைத்து உண்ணும் போராட்டம் நடத்தி வந்தனர். போராட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் கலந்துகொண்டனர். இருந்தும் அரசு அவர்களது போராட்டத்துக்கு செவிமடுக்கவில்லை.

இந்நிலையில், இன்று ஊர் பொதுமக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 10 பேரின் பிணை வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வரும் 19ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அப்போதாவது தமிழக அரசு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அவர்களை வெளியே விட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.