Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 11, 2017

ஒடிஷாவில் பசுவை அடித்து தூக்கிய அமித்ஷா ? பசு தீவிரவாதிகள் (டவுசர்கள்) லயனில் வரவும்.....


ஒடிஷாவில் சாலையில் போய்க் கொண்டிருந்த பசுவை பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷாவின் பாதுகாப்புக்கு சென்ற கார் அடித்து தூக்கியது.

ஒடிஷா மாநிலம் ஜெய்பூர் மாவட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா புதன்கிழமையன்று சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த பசு மாடு மீது அமித்ஷாவின் பாதுகாப்புக்கு சென்ற கார் ஒன்று படுவேகமாக மோதியது.

இதில் பசுமாடு படுகாயமடைந்தது. நாடு முழுவதும் பாஜகவினர் பசுக்களைப் பாதுகாப்போம் என கூறிக் கொண்டு அராஜகங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி அடித்தே கொலை செய்கிற சம்பவங்கள் நடைபெறுகின்றன. அண்மையில் பழனியில் விவசாயத்துக்கு மாடுகளை கொண்டு சென்ற விவசாயி ஒருவரிடம் வம்பு செய்து மத மோதலை உருவாக்கியிருந்தனர்.

இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் பாதுகாப்புக்கு சென்ற வாகனமே சாலையில் சென்ற பசுவை அடித்து தூக்கியிருக்கிறது. இந்த விவகாரத்தை ஒடிஷா பிஜூ ஜனதா தளம் கையிலெடுத்து விளாசி வருகிறது

அதேநேரத்தில் இது தொடர்பாக விளக்கம் அளித்த பாஜக மூத்த தலைவர் பிரதாப் சாரங்கி, அமித்ஷாவின் பாதுகாப்புக்கு வந்த வாகனம்தான் மோதியது. உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவித்தோம். அவரும் போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டார். போலீசாரும் கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பசுமாட்டுக்கு சிகிச்சை அளித்தனர் என விவரித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.