Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 1, 2017

தமிழக - கேரளா சோதனை சாவடி மூடல்: ஜிஎஸ்டி அமல் எதிரொலி !


ஜிஎஸ்டி வரி அமலானதால் புளியரையில் உள்ள தமிழக - கேரளா எல்லை சோதனை சாவடி மூடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த வரிவிதிப்பின்படி, மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகள் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநில எல்லைகளிலும், வணிகவரித்துறை சோதனைச்சாவடிகள் நிறுவப்பட்டு, சரக்குப் பொருட்களை பரிசோதித்து, அதற்கான வரி வசூலிக்கப்படுவது வழக்கம்.

தமிழக, கேரளா எல்லையான நெல்லை மாவட்டம் புளியரை வழியாக கேரள மாநிலத்திற்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் பல்வேறு சரக்குக்களை ஏற்றி செல்லும் லாரிகளில் சோதனைகளை நடத்த புளியரையில் தமிழக அரசின் வணிகவரி சோதனை சாவடி அமைக்கபட்டு இருந்தது.

இந்த சோதனை சாவடியை அடுத்து கேரள மாநில வணிகவரி சோதனை சாவடி அமைந்துள்ளது. இரு மாநில எல்லைகளில் இரண்டு சோதனைச் சாவடிகள் இயங்கி வந்தன. இந்நிலையில் இன்று மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியுள்ளதால் புளியறையில் அமைந்துள்ள தமிழக அரசின் வணிக வரித்துறை சோதனை சாவடியை இங்கு பணியில் இருந்த அதிகாரிகள் எந்தவித முன்னறிவிப்புமின்றி நேற்று இரவு மூடினர்.

அதேபோல் கன்னியாகுமரி வணிக வரி சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை மற்றும் அமரவிலையில் உள்ள வணிக வரி சோதனைச் சாவடிகளும் மூடப்பட்டன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.