July 6, 2017
கோவை சிபிஎம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விஎச்பி செயலாளர் நாதாரி சரவணக்குமார் என்கின்ற தீவிரவாதி கைது !
கோவை காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய ஆர்எஸ்எஸ் -ன் உட்பிரிவான விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் வடக்குமாவட்ட செயலாளர் நாதாரி சரவணக்குமார் என்கின்ற தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.
கோவை காந்திபுரம் 100அடி சாலையில் மார்க்சிஸ்ட்சி கட்சியின் மாவட்டக்குழு அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது கடந்த ஜூன் மாதம் 17ம் தேதி அதிகாலை மர்மநபர்கள் இருவர் பெட்ரோல் குண்டுகளை வீசிச்சென்றனர்.அது அங்கிருந்த கார் மீது விழுந்து வெடித்தது. இதில் காரின் ஒரு பகுதி மற்றும் அலுவலக ஜன்னல்கள் சேதமடைந்தன. இந்த சம்பவம் கோவையில் பெறும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக சிசிடிவி பதிவுகள் மற்றும் செல்போன் தொலைபேசி உரையாடல் மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்ட தனிப்படை பிரிவினர் செவ்வாயன்று மேட்டுப்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த சரவணக்குமார் என்பவரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரு கிளை பிரிவான விஸ்வஇந்து பரிஷத் அமைப்பின் வடக்கு மாவட்ட செயலாளராகவும் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. அரசியல் ரீதியான கருத்துக்களை எதிர்கொள்ள முடியாமல், சிபிஎம் அலுவலகம் மீது வன்முறைதாக்குதல் மூலம் பழிதீர்க்க முடிவு செய்து ஒரு குழுவாக இயக்கியிருக்கின்றனர். அந்த குழுவின் செயல்திட்டத்தின் படியே சிபிஎம் அலுவலம் மீது பெட்ரேல் குண்டு வீசியிருக்கின்றனர் என்பது தெரிய வந்திருக்கிறது.
இதையடுத்து பெட்ரோல் குண்டு வீசிய சரவணக்குமாரை இரவில் நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். மேலும் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்து வரும் நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சரவணக்குமார் ஏற்கனவே இது போன்று பல்வேறு வன்முறை செயல்களில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இவர்கள் ஆர்எஸ்எஸ் ன் வன்முறை பிரிவாக இயங்கி வந்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கோவை சிபிஎம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய விஎச்பி செயலாளர் நாதாரி சரவணக்குமார் என்கின்ற தீவிரவாதி கைது !
Reviewed by Admin
on
July 06, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.