July 6, 2017
கச்சா எண்ணெய் வெளியேறுவதால் பதற்றம்: கதிராமங்கலம் ஓஎன்ஜிசி குழாயில் மீண்டும் உடைப்பு!
கும்பகோணம் கதிராமங்கலம் ஓஎன்ஜிசி குழாயில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறுவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கும்பகோணம் அருகே கதிராமங்கலம் கிராமத்தில் கடந்த வாரம் ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து கச்சா எண்ணெய் வெளியேறி வயல்வெளிகளில் பாய்ந்தது.
இதையடுத்து ஓஎன்ஜிசி குழாய்களை அகற்ற வலியுறுத்தி கதிராமங்கலம் கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் வைக்கோல் போர் ஒன்றுக்கு தீ வைத்துவிட்டு அமைதியாக போராடிய மக்கள் மீது குண்டாந்தடிகளால் தாக்கினர்.
இதில் பலருக்கு மண்டை உடைந்தது. மேலும் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 10 பேரை ஜாமீனில் வரமுடியாத வழக்குகளின் கீழ் போலீஸ் கைது செய்தது. இவர்களை விடுதலை செய்யக் கோரி கதிராமங்கலத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று கதிராமங்கலம் பெரிய கடைத்தெருவில் மற்றொரு ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறுகிறது. இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் வெளியேறுவதால் பதற்றம்: கதிராமங்கலம் ஓஎன்ஜிசி குழாயில் மீண்டும் உடைப்பு!
Reviewed by Admin
on
July 06, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 06, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.