Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 1, 2017

சென்னையில் மீராகுமார் பேட்டி; சித்தாந்த போரில் என்னை ஆதரியுங்கள் !


சித்தாந்த போரில் தமிழக எம்.பி., எம்.எல்.ஏக்கள் தன்னை ஆதரிக்கும்படி குடியரசுத் தலைவர் எதிர்க்கட்சி வேட்பாளர் மீரா குமார் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிம் கூறினார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் இம்மாதம் 25ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 17ஆம் தேதி நடைபெறுகிறது. பாஜக சார்பில் பீகார் ஆளுநர் ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அவிக்கப்பட்டுள்ளார். இதேபோல் காங்கிரஸ் சார்பில் முன்னாள் லோக்சபா சபாநாயகர் மீராகுமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

இருவரும் ஒவ்வொரு மாநிலமாக சென்று எம்.பி., எம்.எல்.ஏக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அந்த வகையில் ராம்நாத் கோவிந்த் இன்று மதியம் சென்னை வந்தடைந்தார். அவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து ஆதரவு கோரியுள்ளார்.

இந்நிலையில் காங்கிரஸ் வேட்பார் மீராகுமாரும் மாலை 5.20 மணிக்கு சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் அவரை தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தலைவர் கே.ஆர்.ராமசாமி, முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் ஆகியோர் வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மீரா குமார், சித்தாந்த போரில் என்னை ஆதரிக்கும்படி தமிழக எம்.பி., எம்.எல்.ஏக்களிடம் ஆதரவு கோர வந்துள்ளேன். சென்னை வந்ததை நினைத்து பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன் என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.