Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 11, 2017

கையேந்தி பவன்களைத் தேடி ஓடும் மக்கள்: ஹோட்டல்களுக்கு எமனாக மாறும் ஜிஎஸ்டி !


ஜிஎஸ்டி வரியால் ஹோட்டல்களில் மக்களின் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் சாலையோர கையேந்தி பவன்களில் கூட்டம் அலை மோதத் தொடங்கியுள்ளது.

மத்திய அரசு கடந்த ஒன்றாம் தேதி முதல் ஒரே நாடு ஒரே வரி என்ற நோக்கத்தில் ஜிஎஸ்டி வரியை அமல்படுத்தியது. இதன் மூலம் ஹோட்டல்களுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹோட்டல் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். ஆனாலும் அரசு தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

18 சதவீத வரி என்பது மிக அதிகம் என கருதும் வாடிக்கையாளர்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவதை தவிர்த்து வருகின்றனர். வேலை நிமித்தமாக சென்னை வரும் மக்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவதற்கு பதில் சாலையோர கடைகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் ஹோட்டல்களில் சாப்பிடும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. பெரும்பாலான மக்கள் சாலையோரா கடைகளில் பார்சல் வாங்கிச்செல்லும் வாடிக்கையை தொடங்கியுள்ளனர்.

வாடிக்கையாளர்களின் வரத்து அதிகரிப்பால் சாலையோரக் கடைகளிலும் நாள்தோறும் புதிய உணவு வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மொத்தத்தில் ஜிஎஸ்டி வரியால் பெரிய பெரிய பிராண்டட் ஹோட்டல்கள் வாடிக்கையாளர்ள் எண்ணிக்கை குறைந்து ஈ ஓட்டத் தொடங்கியுள்ளனர்.

அதேநேரத்தில் கையேந்திபவன்களின் விற்பனை களைகட்டியுள்ளது. கடை திறந்த சிறிது நேரத்திலேயே உணவு வகைகள் தீர்ந்துவிடுவதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.