July 8, 2017
போலி புகைப்படங்கள் மூலம் வன்முறையை உருவாக்கும் மேற்கு வங்க பாஜக..!
மேற்கு வங்கத்தில் வன்முறை தணிந்து வரும் வேலையில், அதனை மீண்டும் கொழுந்து விட்டு எரிய செய்து அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிப்பது மீண்டும் அம்பலமாகியிருக்கிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேற்கு வங்கம் 24 பர்காணா மாவட்டத்தில் பேஸ்புக் ஒன்றில் இந்து வந்த சர்ச்சைக்குரிய கருத்தை தொடர்ந்து மிகப்பெரும் வன்முறை உருவானது. இதனால் அங்கு இந்து- முஸ்லீம் மதவெறி கடந்த சில நாட்களாக அதிகரித்து தற்போது தணிந்திருக்கிறது.
இந்த சூழலில் அரியானாவை சேர்ந்த பாஜகவின் மாநில செயற்குழு உறுப்பினர் விஜிதா மாலிக் அவரது முகநூல் பக்கத்தில் ஒரு படத்தை பதிவிட்டிருந்தார். அந்த படத்தில் ஒரு பெண்ணின் சேலையை ஒருவர் பிடித்து இழுக்கிறார். அருகில் இருக்கும் ஒரு கும்பல் அதனை சிரித்த முகத்துடன் வேடிக்கை பார்க்கின்றனர். அந்த பெண் கைகளில் சேலையை பற்றி அனைத்துக் கொண்டு கெஞ்சுவது போன்று இருக்கிறது. அதன் கீழ் மேற்கு வங்கத்தில் இந்து பெண்களின் நிலையை பாரீர்.. மேற்கு வங்க அரசில் இந்து பெண்களுக்கு பாதுகாப்பில்லை என எதிர்த்தரப்பினரை குற்றவாளிகளாக சித்தரிக்கும் நோக்கில் பதிவிட்டிருந்தார்.
இந்த படம் பாஜக மேற்குவங்க மற்றும் இந்தியா முழுவதும் உள்ள இந்தி பேசும் மாநில பாஜகவினர் லட்சக்கணக்கில் பகிர்ந்து வந்தனர்.
ஆனால், விஜிதா மாலிக் பதிவிட்டிருந்த படம், போஜ்பூரி என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி, அந்த காட்சியில் நடித்திருப்பவர், அதாவது அந்த பெண்ணின் சேலையை பிடித்து இழுப்பவர் தற்போது பாஜகவின் தலைவர்களில் ஒருவரான மனோஜ் திவாரி என்பவர் ஷாபி ஷர்மா என்ற நடிகையின் சேலையை உருவும் படம் ஆகும். இந்த படத்தில் பாஜக தலைவர் மனோஜ் திவாரியை மட்டும் வெட்டி விட்டு, அப்படியே படத்தை பதிவிட்டு அதனை இஸ்லாமியர்களுக்கு எதிராக சித்தரித்து, வன்முறையை தூண்டியிருக்கிறார்.
இந்த படம் வைரலாக பரவிய சில மணி நேரங்களில் அந்த படத்தின் உண்மையான படத்தை போட்டு பலரும் இது திட்டமிட்ட வன்முறை உருவாக்கும் போலி படம் ஆகும். இதனை மக்கள் நம்ப வேண்டாம். பாஜகவின் சூழ்ச்சியில் இந்து மக்கள் சிக்கிவிட வேண்டாம் என பதிவிட்டிருந்தனர்.
இதையடுத்து பாஜக தலைவர் மற்றும் சங்பரிவார் அமைப்புகள் அந்த படத்தை தங்களின் பங்கங்களில் இருந்து நீக்கியிருக்கின்றனர். இப்படி ஒவ்வொரு தருணத்தையும் தனது சொந்த அரசியல் ஆதாயத்திற்காக அப்பாவி இந்து முஸ்லீம் மக்களை மோத விட்டு அதிலிருந்து அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது மீண்டு ஒரு முறை அம்பலமாகியிருக்கிறது.
ஏற்கனவே பாஜக எந்த ஒரு இடத்தில் மதரீதியான வன்முறையை கையில் எடுத்திருக்கிறதோ, அந்த இடம் அவர்களுக்கு அரசியல் ரீதியாக வெற்றியையே பெற்று தந்திருக்கிறது என்பது பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரிய வந்திருக்கிறது. அண்மையில் கூட யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மீண்டும் தங்களின் ஆய்வு மூலம் உறுதி செய்திருந்தனர். இந்த நிலையில்தான், மேற்கு வங்கத்தை பாஜக தற்போது குறிவைத்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதரீதியான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதில் அரசியல் ஆதாயம் தேடுவது மிகவும் அருவருக்கத்தக்கது என விமர்சித்திருக்கிறது.
போலி புகைப்படங்கள் மூலம் வன்முறையை உருவாக்கும் மேற்கு வங்க பாஜக..!
Reviewed by Admin
on
July 08, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 08, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.