July 21, 2017
கணவன் ஆணுறுப்பை கட் செய்து கையோடு எடுத்து சென்ற மனைவி !
வேலூர் மாவட்டத்தில் இத்திடுக்கிடும் சம்பவம் நடந்துள்ளது. குடியாத்தத்தில் வசித்து வந்தவர்கள் சரசு-ஜெகதீசன் தம்பதியினர். 14ஆண்டுக்கு முன் கலப்பு திருமணம் செய்துகொண்டவர்கள். இத்தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் 3பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஓராண்டாக இவர்கள் பிரிந்து வசிக்கின்றனர். சரசு வேலூரில் உள்ள தாய் வீட்டில் வசிக்கிறார். கடந்த புதன்கிழமை மகனின் பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்தார் சரசு. மகனின் வேண்டுகோளை ஏற்று கணவர் வீட்டில் தங்கினார். இரவில் ஜெகதீசனுக்கும், சரசுவுக்கும் இடையே உரசல் ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக ஜெகதீசன் மிரட்டியுள்ளார். அதிகாலை 3 மணியளவில் அவரது உறுப்பை துண்டித்த சரசு வீட்டின் பின்பக்கம் வழியாக ஓடி தப்பித்தார். ஜெகதீசனின் அலறல் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை வேலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அபாயகட்டத்தை தாண்டிய அவருக்கு ஆபரேஷன் செய்ய டாக்டர்கள் முடிவெடுத்தனர். இதற்கிடையே, சரசுவை வேலூர் செல்லும் வழியில் போலீசார் கைது செய்தனர். அவரின் பர்சில் இருந்த ஜெகதீசனின் உறுப்பு டாக்டர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கணவன் ஆணுறுப்பை கட் செய்து கையோடு எடுத்து சென்ற மனைவி !
Reviewed by Admin
on
July 21, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.