July 19, 2017
திருவண்ணாமலையில் காதலியை கத்தியால் குத்தி வயலில் வீசிய காதலன்: வீடியோ
திருவண்ணாமலை ஆரணி அருகே மோனிகா என்ற கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு விவசாய நிலத்தில் சடலமாக கிடந்துள்ளார்.
தான் தான் கொலை செய்தேன் என போளுர் காவல் நிலையத்தில் காதலன் சரண் அடைந்துள்ளான்.
ஆரணி அருகே மலையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மோனிகா (20), இவர் முன்னால் ராணுவ வீரரின் மகள், காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் 3 ஆம் ஆண்டு பிஏ படித்துவந்துள்ளார்.
வீட்டிற்கு வருவதாக கூறிய மகளை காணவில்லையே என பெற்றோர்கள் தேடி வந்த நிலையில் அரியப்பாடியில் உள்ள விவசாய நிலத்தில் மோனிகா சடலமாக கிடந்துள்ளார்.
இந்நிலையில், நான் தான் கொலை செய்தேன் என்று வாலிபர் ஒருவர் பொலிசில் சரனடைந்து வாக்குமூலமும் கொடுத்துள்ளார்.
வாக்குமூலத்தில், அவர் கூறியதாவது,
மோனிகா என்னை காதலித்து வந்தார், திடீர் என வீட்டில் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்யப் போவதாக கூறினார், என்னை ஏமாற்றியதால் கொலை செய்தேன்” என சரண் அடைந்த கோகுல்நாத் கூறியுள்ளான். போலிசார் தொடர்ந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சரனடைந்தவனின் வீட்டை மோனிகாவின் உறவினர்கள் அடித்து உடைத்து போராட்டம் நடத்தியுள்ளனர்.
திருவண்ணாமலையில் காதலியை கத்தியால் குத்தி வயலில் வீசிய காதலன்: வீடியோ
Reviewed by Admin
on
July 19, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 19, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.