Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 10, 2017

வைகோ பகீர் குற்றச்சாட்டு: பேராசிரியர் ஜெயராமனை குண்டர் சட்டத்தில் அடைக்க தமிழக அரசு திட்டம் !


ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் பேராசிரியர் ஜெயராமனை குண்டர் சட்டத்தில் அடைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

கும்பகோணத்தை அடுத்த கதிராமங்கலம் கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த வருகின்றனர்.

பேராசிரியர் ஜெயராமன் உட்பட கிராம மக்கள் 10 பேரை விடுவிக்கக்கோரி கதிராமங்களத்தில் நடைபெற்று வரும் கடையடைப்பு போராட்டம் இன்று 10வது நாளை எட்டியுள்ளது.

இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கதிராமங்கலத்திற்கு பேரணியாக சென்றார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது, வைகோ திடீரென மயங்கி விழுந்தார்.

அருகில் இருந்தவர்கள் அவரை தாங்கிப் பிடித்து ஆசுவாசப்படுத்தினர். சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்து எழுந்த வைகோ, அதனை பொருட்படுத்தாமல் மீண்டும் ஆதரவுக் கூட்டத்தில் பேசினார்.

இதைத்தொடர்ந்து வைகோ செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராக அனைத்து கட்சியினரும் இணைந்து போராட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

பேராசிரியர் ஜெயராமன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். மேலும் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.