July 21, 2017
ராகுல் காந்தி குற்றச்சாட்டு: மோடி அரசின் இயலாமையால் காஷ்மீர் பற்றி எரிகிறது !
காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண சீனாவின் தலையீடு அவசியமற்றது என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் பிரச்சனை இந்தியாவின் உள் விவகாரம் என்று தெரிவித்துள்ளார்.
எனவே அது தொடர்பான தீர்வுகளுக்கு வேறு நாடுகளின் தலையீடு தேவையில்லை என்றார் அவர். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி காஷ்மீர் என்பதில் மாற்று கருத்து இல்லை என்று தெரிவித்த ராகுல்காந்தி, காஷ்மீர் பற்றி எரிவதற்கு மோடி அரசின் இயலாமையே காரணம் எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகள் ஆகியும் காஷ்மீர் பிரச்சனையில் பிரதமர் மோடிக்கு அக்கறையில்லை எனவும் அவர் சாடியுள்ளார். இதனிடையே காஷம்மீரில் ராணுவ நடவடிக்கைகளில் சாதாரண மக்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, முழு அடைப்பு நடக்கிறது. பிரிவினைவாத அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ள முழு அடைப்பால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
ஹிஸ்புல் கமாண்டர் புர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து கடந்த ஒரு வருடமாக காஷ்மீரில் அசாதாரண சூழல் நீடிக்கிறது. பாதுகாப்பு படையினர் மீது பொதுமக்கள் கல்வீச்சு நடத்துவதால் அவர்கள் மீது ராணுவம் பதில் தாக்குதல் நடத்துகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். காஷ்மீரில் இயல்பு நிலை திரும்ப பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்ற முதலமைச்சர் மெஹபூபா முக்தியின் கருத்தை மத்திய அரசு ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தி குற்றச்சாட்டு: மோடி அரசின் இயலாமையால் காஷ்மீர் பற்றி எரிகிறது !
Reviewed by Admin
on
July 21, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.