July 20, 2017
தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்டு தமிழக விவசாயிகள் போராட்டம்: எம்எல்ஏ.,க்கள் ஊதிய விவகாரம் !
டெல்லியில் விவசாயிகள் 5-வது நாளாக இன்று போராட்டத்தை தொடர்கின்றனர். இதில், அவர்கள் தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்டு போராட்டம் நடத்தியது காண்பவரின் மனதை உருக்கியது.
தமிழக சட்டப்பேரவையில் எம்எல்ஏக்களுக்கான ஊதியம் இருமடங்காக உயர்த்தப்பட்டதன் தாக்கத்தை டெல்லியில் காணமுடிந்தது. இதைக் கண்டிக்கும் வகையில் தமிழக விவசாயிகள் இன்று தன்னைத் தானே செருப்பால் அடித்து கொண்டனர். விவசாயிகள் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாத அரசிற்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியமைக்காக இவ்வாறு செய்வதாக விவசாயிகள் கூறினர்.
இது குறித்து 'தி இந்து'விடம் அய்யாகண்ணு கூறுகையில், ''விவசாயிகள் பிரச்சனைகளை சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்தில் பேசித் தீர்ப்பதாகக் கூறியதால்தான் நாம் அரசியல்வாதிகளுக்கு வாக்களித்தோம். ஆனால், நேற்று சட்டமன்றத்தில் அவர்கள் தம் நலன் காக்கும் வகையில் ஊதியம் உயர்த்திக் கொண்டார்களே தவிர எங்களை பற்றிக் கவலைப்படவில்லை. இதற்காக நாம் அவர்களுக்கு வாக்களித்தது தவறு என்பதை எடுத்துக் கூறும் வகையில் இவ்வாறு செருப்பால் அடித்து கொள்கிறோம்'' எனத் தெரிவித்தார்.
கடந்த ஜூலை 15 முதல் இந்த போராட்டம் தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 102 விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.
நதிநீர் இணைப்பு, விவசாயக்கடன் தள்ளுபடி உட்பட பல கோரிக்கைகளுக்காக கடந்த மார்ச் 14-ல் துவங்கி 41 நாட்கள் நடத்தி இருந்தனர். இதன் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 ஆம் தேதி முதல் போராட்டம் துவங்கியுள்ளது. தற்போது கடந்தமுறையை விட தீவிரமாக போராட்டத்தை நடத்தத் தமிழக விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
தன்னைத்தானே செருப்பால் அடித்து கொண்டு தமிழக விவசாயிகள் போராட்டம்: எம்எல்ஏ.,க்கள் ஊதிய விவகாரம் !
Reviewed by Admin
on
July 20, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 20, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.