July 11, 2017
துப்பாக்கி முனையில் காதலனை கடத்திய ரிவால்வர் ராணி ! அட இதுக்கு தானா..?
உத்திரபிரதேச மாநிலத்தில் தன்னை காதலித்து ஏமாற்றிய காதலனை துப்பாக்கி முனையில் கடத்தி அவரையே திருமணம் செய்துகொண்ட காரணத்தால் அப்பகுதி மக்கள் இவரை ரிவால்வர் ராணி என்றே அழைக்கின்றனர்.
அசோக் யாதவ், வர்ஷா ஆகிய இருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மே மாதம் 15 ஆம் திகதி அசோக் யாதவிற்கும், மற்றொரு பெண்ணான பாரதி என்பவருக்கும் திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மணமகனாக அசோக் யாதவ்வும் திருமணத்திற்கு தயாராகி மணமகனாக மணவறைக்கு சென்று அமர்ந்துள்ளார்.
இதனை அறிந்த வர்ஷா கோபமடைந்து, 2 நபர்களுடன் உடனடியாக திருமணம் நடக்க இருந்த இடத்திற்கு சென்று, அசோக் யாதவ் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டினார்.
மேலும், துப்பாக்கி முனையில் அசோக் யாதவை காரில் கடத்தியும் சென்றார்.
திருமணம் நடக்க இருந்த பெண்ணின் தந்தையான லாலு யாதவ் என்பவர் இது குறித்து பொலிசில் புகார் செய்தார். தன் பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டு அசோக் யாதவ் ஓடி விட்டதாக புகார் அளித்தார்.
இந்த புகாரை அடுத்து பொலிசார் அசோக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர். தனது மகனின் செயலால் கோபமடைந்த அசோக்கின் தந்தை, அவரை ஜாமீனில் கூட எடுக்காமல் கைவிட்டு சென்றுள்ளார்.
தனது காதலன் சிறையில் இருப்பதால் மனம் உடைந்த வர்ஷா, அசோக்கை கடந்த 7 ஆம் திகதி ஜாமீனில் எடுத்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் ஹமிபூர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் சிவசேனா செய்து இருந்தது.
இதுதவிர ஆண்களால் ஏமாற்றப்படும் பெண்களை காப்பாற்ற வர்ஷா தலைமையில் ஒரு என்.ஜி.ஓ., அமைப்பும் துவக்கப்படும் என சிவசேனா அறிவித்துள்ளது.
துப்பாக்கி முனையில் காதலனை கடத்திய ரிவால்வர் ராணி ! அட இதுக்கு தானா..?
Reviewed by Admin
on
July 11, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 11, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.