Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 17, 2017

கம்பிக்கேட்டை துணியை போட்டு மூடிய சிறை நிர்வாகம்: சசியை யாரும் பார்த்துவிடக்கூடாதாம் ?


சசிகலாவை யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக அவர் அடைக்கப்பட்டுள்ள கம்பிக் கேட்டை துணியை போட்டு சிறை நிர்வாகத்தினர் மூடி வைத்துள்ளனர்.

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு சிறை கஷ்டம் தெரியாத அளவுக்கு அவருக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டு இருப்பது ஆய்வில் அம்பலமாகியுள்ளளது.

சசிகலாவுக்கு டிவி பார்க்க, யோகா செய்ய என 5 தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த அறையில் சிறிய அளவிலா மெத்தை, குக்கர், சமைப்பதற்கான பாத்திரங்கள் என சகல வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் பிளாஸ்டிக் டப்பாக்களில் மளிகை பொருட்கள் போன்றவை வைக்கப்பட்டிருப்பதும் அந்த போட்டோவில் அம்பலமாகியுள்ளது.

மேலும் சசிகலாவை சிறையில் யாரும் பார்த்துவிடக் கூடாது என்பதற்காக அவர் பயன்படுத்தும் அறைகளில் உள்ள கம்பிக்கேட்டுகள் வெள்ளை நிற ஸ்க்ரீன் துணியால் முற்றிலும் மூடப்பட்டுள்ளன.

இது சசிகலாவை பார்க்க கூடாது என்பதற்காகவா அல்லது சசிகலா அளிக்கப்பட்டுள்ள வசதிகளை பார்க்கக்கூடாது என்பதற்காகவா என்பது உதவிய சிறைத்துறை அதிகாரிகளுக்கே வெளிச்சம்...

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.