Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 25, 2017

தமிழகம் முழுவதும் திடீர் கருத்து கேட்பு தீவிரம்: பாஜகவில் ஓபிஎஸ் அணி இணைய டெல்லி நெருக்கடி !


பாரதிய ஜனதா கட்சியில் ஓபிஎஸ் அணி இணைய வேண்டும் என டெல்லி நெருக்கடி கொடுப்பதால் தமிழகம் முழுவதும் இது தொடர்பாக ஆதரவாளர்களிடம் திடீரென ரகசியமாக கருத்து கேட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது.

  டெல்லியில் இருந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் புறப்பட்டு வர அழைப்பு வந்தது. டெல்லியில் முகாமிட்டு ஓபிஎஸ் பிரதமர் மோடியை சந்தித்தார்.

பின்னர் மைத்ரேயனுடன் இணைந்து மோடியை தனியாக சந்தித்தார். இச்சந்திப்புகளுக்குப் பின்னர் பாஜகவில் இணைவது தொடர்பாக ஆதரவாளர்களிடம் ரகசியமாக ஓபிஎஸ் கருத்து கேட்டு வருகிறார்.

பாஜகவில் கூண்டோடு இணைய நெருக்கடி கொடுக்கப்படுவதால்தான் கருத்து கேட்பதில் ஓபிஎஸ் அவசரம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதிமுகவின் ஓபிஎஸ் பாஜகவில் இணையும் நிலையில் எடப்பாடி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்து உள்ளாட்சி தேர்தலை முதலில் சந்தித்து காலூன்றிவிடலாம் என்பதுதான் பாஜகவின் கணக்காம். இதற்காகவே இந்த நெருக்கடி கொடுக்கப்படுவதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.