நாடு முழுவதும் ஒரே வரிவிதிப்பு முறையான ஜிஎஸ்டி வரிமுறை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பல பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இந்த வரிமுறையை பல்வேறு தரப்பினர் ஆதரித்தும் எதிர்த்தும் வருகின்றனர்.
இந்நிலையில், ஜிஎஸ்டி விதிப்பால் திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு வரிச்சுமை அதிகரித்துள்ளதால் தரிசன டிக்கெட் மற்றும் லட்டு பிரசாதத்தின் விலையை உயர்த்த தேவஸ்தான தரப்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
இதுகுறித்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செயல் அதிகாரி அனில்குமார் சிங்கால் கூறுகையில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான விடுதிகளில் 1000 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை தங்கும் விடுதிகளுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படும். 2500 ரூபாய்க்கு அதிகமான தங்கும் அறைகளுக்கு 18 சதவீதம் வரி வசூலிக்கப்படும்.
அதேபோல் தேவஸ்தானம் சார்பில் விற்கப்படும் தங்க டாலருக்கு 3 சதவீதம் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும் திருப்பதி லட்டு பிரசாதம், தரிசன டிக்கெட் மீது ஜிஎஸ்டி வரி இருக்காது. ஆதலால் லட்டு பிரசாதத்தின் விலை உயர வாய்ப்பில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.