Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 12, 2017

அமெரிக்காவில் கடலில் தத்தளித்த 9 பேரை மனித சங்கிலி அமைத்து காப்பாற்ற உதவிய பெண்!


அமெரிக்காவில் கடலில் தத்தளித்த 9 பேரை கடற்கரையில் இருந்த சுமார் 80 பேர் மனித சங்கிலி அமைத்து காப்பற்றிய சம்பவம் நெகிழ வைத்துள்ளது. ஃபுளோரிடாவின் பனாமா நகர கடற்கரை சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் பனாமா நகரவாசிகளும் அது பொழுதுபோக்கு ஸ்தலமாக விளங்குகிறது. இதனால் பொதுமக்கள் அங்கு குவிந்த வண்ணம் இருப்பர்.

இந்நிலையில் பனாமா கடலில் குளித்து கொண்டிருந்த ராபர்டோ உர்ஸ்ரே என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் திடீரென அலைகளில் சிக்கி ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டனர். அவர்களைக் காப்பாற்றச் சென்ற 3 நீச்சல் வீரர்களும் அலைகளால் இழுத்துச் செல்லப்பட 9 பேரும் கடலில் தத்தளிக்கத் தொடங்கினர்.

மேலும், அவர்களைச் சுற்றி சுறா ஒன்றும் வட்டமடிக்கத் தொடங்கியது. இதனால் பயந்த அவர்கள் கூச்சலிட்டனர். இதனையடுத்து அவர்கள் கடலில் தத்தளிப்பதை முதலில் பார்த்த ஜெஸிகா மே சிம்மன்ஸ் என்பவர், தனது 8 மற்றும் 11 வயது மகன்களின் உதவியுடன் கடற்கரையில் இருந்த மற்றவர்களையும் உதவிக்கு அழைத்தனர்.

அதன்படி சிறிது நேரத்தில் ஜெஸிகா அங்கிருந்த சுமார் 80 பேரின் உதவியுடன் மனிதச் சங்கிலி அமைத்து கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை பாதுகாப்பாக கரை சேர்த்தார். இந்த சம்பவம் அங்கிருத்தவர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.