July 4, 2017
வங்காளதேசத்தில் 9 பேர் பலி: ஆடை தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து விபத்து !
வங்காளதேசத்தில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 9 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆடை ஏற்றுமதியில் சீனாவிற்க்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக தொழிலாளர்களை வங்காளதேசம் கொண்டுள்ளது.
வங்காளதேசத்தின் தலைநகர் டாக்காவில் ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளது. பல்வேறு நாடுகளுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 80% லாபத்தை ஆடை தொழிற்சாலை நிறுவனங்கள் பெற்று தருகின்றன.
இந்நிலையில், டாக்காவில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலையில் நேற்று எதிர்பாராத விதமாக கொதிகலன் வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் சிக்கி 9 தொழிலாளர்கள் உடல் கருகி பலியாகினர்.
இதனையடுத்து, தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். மேலும், பலர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.
வங்காளதேசத்தில் 9 பேர் பலி: ஆடை தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து விபத்து !
Reviewed by Admin
on
July 04, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 04, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.