July 17, 2017
85% இடஒதுக்கீடு வழங்கும் மருத்துவப்படிப்பில் அரசாணை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு !
மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதமும் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீத இட ஒதுக்கீடும் வழங்கப்படும் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், இந்த உள் ஒதுக்கீட்டை எதிர்த்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் தர்னிஸ் குமார், வி.எஸ்.சசி சச்சின் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதேபோல் மேலும் 4 மாணவர்கள் அரசின் உத்தரவை எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் ஆணைக்கு தடை விதிக்கக் கூடாது என்று தமிழக அரசு வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த பிறகு நீதிபதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பினை நீதிபதி ரவிச்சந்திரபாபு வழங்கினார். அதில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்பட்டது. மேலும் எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு புதிய தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் ஐகோர்ட் நீதிபதி தெரிவித்தார்.
இந்நிலையில் இடஒதுக்கீட்டு அரசாணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்தததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அப்பீல் செய்துள்ளார்.
மத்திய பாடத்திட்டத்தில் சமனற்ற நிலையை களையவே உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது என தமிழக அரசின் அப்பீல் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5% இடஒதுக்கீடு வழங்க அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
85% இடஒதுக்கீடு வழங்கும் மருத்துவப்படிப்பில் அரசாணை ரத்து செய்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு !
Reviewed by Admin
on
July 17, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.