Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 20, 2017

80க்கும் அதிகமான இளம் விதவைகள் உள்ள கிராமம்: மதுவின் கொடுமையால் !


மதுவின் கொடுமையால் புதுச்சேரியின் மேலையூர் கிராமம் அதிக இளம் விதவைகள் கொண்ட கிராமமாக மாறி வருகிறது. காரைக்கால் அருகே உள்ள மேலையூர் கிராமத்தில் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு 80க்கும் அதிகமானோர் தங்கள் கணவரை இழந்து இளம் விதவைகளாக தவித்து வருகின்றனர்.

இந்த அளவுக்கு விதவைகள் உருவாக காரணம் மது ஆகும். அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் தங்களது குழந்தைகளை வளர்க்க முடியாமல் இந்த கிராமத்துப் பெண்கள் துன்பப்படுகின்றனர்.

ஏற்கனவே குடிக்கு அடிமையாகக் கிடக்கும் இந்த மேலையூரை சுற்றி பல மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளதாக பெண்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தங்களுக்கு அரசு உதவ வேண்டும் என மேலையூர் கிராமத்துப் பெண்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மதுவின் கொடுமையால் இளம் விதவைகளின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வருவது பற்றி அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.