Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 22, 2017

பாதி மொட்டை அடித்து கொண்டு டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: 7-வது நாள் !


டெல்லியில் 7 ஆவது நாளாக இன்று விவசாயிகள் நடத்திய போராட்டத்தில், பாதி தலையை மொட்டை அடித்து கொண்டனர்.

தேசிய தென் இந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் தமிழக விவசாயிகள் இரண்டாம்கட்ட போராட்டம் துவக்கி உள்ளனர். இதன் 7 ஆவது நாளான இன்று அவர்கள் தங்கள் தலையை பாதி மொட்டையாக அடித்துக் கொண்டனர். தமிழம் மற்றும் மாநில் அரசுகள் தங்களை ஏமாற்றி விட்டதாகச் சுட்டிக் காட்டும் வகையில் இதை செய்வதாக அவர்கள் கூறினர்..

இது குறித்து ‘தி இந்து’விடம் அச்சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு கூறுகையில், ‘கடந்த மார்ச்சில் 41 நாள் போராட்டம் நடத்தினோம். அப்போது, விவசாயிகள் பெற்ற கடன் வசூலுக்காக துன்புறுத்தப்பட மாட்டார்கள் என்பது உட்பட பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உறுதி அளித்தார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகவும், போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்பும்படியும் கேட்டுக் கொண்டார். இவ்விருவரின் பேச்சுக்களை நம்பி நாம் ஏமாற்றப்பட்டு விட்டோம். இந்தமுறை எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தீவிரமாகப் போராடுவோம்.’ எனத் தெரிவித்தார்.

நதிகள் இணைப்பு, விவசாயக்கடன் தள்ளுபடி, கூடுதல் வறட்சி நிவாரணம் உட்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 15 முதல் தமிழக விவசாயிகள் போராட்டம் துவக்கி உள்ளனர். இந்த போராட்டத்திற்கு கடந்தமுறையை போலவே பல அரசியல் கட்சித் தலைவர்கள் ஆதரவளித்து வருகின்றனர். காங்கிரஸின் மூத்த தலைவர்

மணிசங்கர் ஐயர், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் டி.ராஜா, திமுகவின் மாநிலங்களவை மூத்த உறுப்பினர் திருச்சி சிவா உட்படப் பலரும் நேரில் வந்து விவசாயிகளை ஆதரித்து பேசியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.