Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 4, 2017

அதிமுகவை வழிநடத்த ஓபிஎஸ் தலைமையில் 7 பேர் குழு: எடப்பாடிக்கும் ஓ.கே ! டம்மியாகும் டிடிவி தினகரன் !!


அதிமுகவை வழிநடத்த 7 பேர் கொண்ட குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணி நடுவே இணைப்பு ஏற்படுத்த உருவாக்கப்பட்ட குழு கலைக்கப்பட்டது. ஆனால் இரு அணிகள் இணைய உறுதியாக உள்ளன. எனவே, அதிமுக அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று முதல்வர் அணியை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் இன்று

குழுக்கள் கலைக்கப்பட்டாலும் இணைப்பு பேச்சுவார்த்தை தொடருகிறது. ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் எடப்பாடியை சந்தித்தனர் என்றார் அவர்.

இதனிடையே, கட்சியை வழிநடத்த இரு அணிகளை சேர்ந்த எழுவர் குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாம். குழுவின் தலைவராக ஓபிஎஸ் செயல்படுவார் என்றும், வழிநடத்தும் குழுவின் துணைத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.

ஓபிஎஸ் அணியின் 2 பேருக்கு அமைச்சர் பதவி கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். ஆனால், எடப்பாடியே முதல்வராக தொடரலாமாம். அதிமுக தலைமை பதவிக்கு ஈடான பதவி இந்த குழு தலைவர் பதவி. எனவே டிடிவி தினகரன் டம்மி செய்யப்படுவதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.