Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 9, 2017

ஆந்திராவில் 6 தமிழர்கள் கைது: செம்மரம் வெட்டி கடத்தியதாக புகார் !


ஆந்திர மாநிலத்தில் செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழகத்தை சேர்ந்த 6 பேரை அம்மாநில போலீஸார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலம் கடப்பா அருகேயுள்ள வனப்பகுதி ஒன்றில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அவர்களிடம் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனடையே திருப்பதி திருமலை மலைப்பாதையை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 6 செம்மரக்கட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், தப்பிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.