July 21, 2017
நாப்கின்களை பிரதமருக்கு அனுப்ப முயன்ற 6 பேர் கைது: நாப்கின்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி எதிரொலி !
புரட்சிகர இளைஞர் அமைப்பைச் சேர்ந்த 6 பேரை கோயம்புத்தூர் நகர போலீசார் கைது செய்துள்ளனர். (பொருட்கள் மற்றும் சேவை வரி)க்கு ஜிஎஸ்டி 12% அதிகரித்துள்ளதை கண்டித்து புரட்சிகர அமைப்பைச் சேர்ந்தவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாப்கின்களை அனுப்ப முயன்றபோது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட புரட்சிக்கர இளைஞர் அமைப்பைச் சேர்ந்த 6 பேரில் 3 பேர் பெண்கள் ஆவர். கோயம்புத்தூரில் உள்ள தபால் அலுவலகம் முன் வந்த போராட்டக்காரர்கள், பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறிய பார்சலில் நாப்கின்களை அனுப்ப முயன்றனர். அப்போது தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
அத்தியாவசியமற்ற ஆடம்பர கார்கள், விடுதிகளுக்கான வரிகள் குறைக்கப்பட்டு, அத்தியாவசியப் பொருட்கள் பலவற்றிற்கு வரிகள் விதிக்கப்பட்டதாக பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெண்கள் மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தும் நாப்கின்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு அத்தியாவசியமற்ற பல பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து வரிவிலக்கு அளித்து, அத்தியாவசிய பொருட்களுக்கு வரி உயர்த்தியுள்ளது என்று போராட்டக்காரர்கள் செய்தியாளர்களிடம் கூறியுள்ளனர். மேலும் நாப்கின்களுக்கு 12% ஜிஎஸ்டி வரியும், குழந்தை உணவுகளுக்கு 18% ஜிஎஸ்டி வரியும் அளித்துள்ள மத்திய அரசு, பீட்சாவுக்கு வெறும் 5% வரி மட்டுமே அளித்துள்ளது.
இதனை கண்டித்து நாப்கினுக்கு விதிக்கப்பட்ட வரியை திரும்பப் பெறக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு நாப்கின் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாப்கின்களை பிரதமருக்கு அனுப்ப முயன்ற 6 பேர் கைது: நாப்கின்களுக்கு 12% ஜிஎஸ்டி வரி எதிரொலி !
Reviewed by Admin
on
July 21, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 21, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.