July 16, 2017
கதிராமங்கலத்தில் 6வது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்: 10 பேரை விடுதலை செய் !
கதிராமங்கலம் மக்களுக்காக போராடிய பத்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி அய்யனார் கோயில் திடலில் சமைத்து உண்டு 6வது நாளாக மக்கள் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்திலிருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என்று கோரி கடந்த மாதம் 30ம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தை வன்முறையாக மாற்றி 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அய்யனார் கோயிலில் பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அய்யானர் கோயில் திடலில் கடந்த 11ம் தேதி தொடங்கிய காத்திருப்பு போராட்டம் 6வது நாளாக இன்றும் தொடர்ந்து நடக்கிறது. கோயில் அருகில் கிராம மக்கள் கூடி அங்கேயே சமைத்து சாப்பிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள், இந்த மண்ணை காப்பாற்றுவதற்காக கடந்த இரண்டு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசும், மத்திய அரசும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன என்று குற்றம்சாட்டி வருகின்றனர்.
ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வேண்டும். பத்து பேர் மீது போடப்பட்ட பொய் வழக்கை போலீசார் திரும்பப் பெற வேண்டும். அவர்கள் அனைவரையும் போலீசார் விடுவிக்க வேண்டும் என்று கிராம மக்கள் உறுதியாக போராடி வருகின்றனர்.
கதிராமங்கலம் போராட்டத்திற்கு கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், சுற்றுச் சூழல் ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் தொடர்ந்து போராட்டம் நடத்தப்பட்டு வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கதிராமங்கலத்தில் 6வது நாளாக தொடரும் காத்திருப்பு போராட்டம்: 10 பேரை விடுதலை செய் !
Reviewed by Admin
on
July 16, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 16, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.