Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 4, 2017

இதற்குத்தான் இத்தனை பரபரப்பா? ரூ. 570 கோடியுடன் சிக்கிய திருப்பூர் கண்டெய்னர் லாரி !


திருப்பூரில் கண்டெய்னர் லாரியில் ரூ.570 கோடி பிடிப்பட்ட சம்பவம் முதல் இன்று வரை அந்த வழக்கில் ஏற்பட்ட திடீர் திருப்பங்களை காண்போம்.

மே 13, 2016- தமிழகச் சட்டசபை தேர்தல் நேரத்தில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்தபோது திருப்பூர் அருகே 3 கன்டெய்னர் லாரிகளில் எடுத்துச் செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும்படை பறிமுதல் செய்தது.

ஜூன் 9, 2016- திருப்பூரில் 570 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து திமுக தொடர்ந்த வழக்கில் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 29, 2016- சிபிஐக்கு மாற்ற கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ஜூலை 4, 2016- திருப்பூர் கண்டெய்னர் லாரியில் சிக்கிய ரூ.570 கோடி விவகாரம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆகஸ்ட் 8, 2016- ரூ.570 கோடி பிடிப்பட்டது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

ஜூலை 4, 2017- கண்டெய்னர் லாரியில் சிக்கிய ரூ.570 கோடி பணம் வங்கிக்கு சொந்தமானது என்று சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.