July 13, 2017
பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: கங்கை நதியில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் !
கங்கை நதி மற்றும் அதன் கரைகளில் குப்பைக் கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. கங்கை கரையில் இருக்கும் தோல் பதனிடும் ஆலைகளை ஆறு வாரங்களுக்குள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்திர பிரதேச அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. கங்கை மற்றும் அதன் துணை நதிக் கரையில் சடலங்களை எரியூட்டுவது உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்றும் தீர்ப்பாயம் கேட்டுக் கொண்டுள்ளது.
உலகில் மிகுந்த அசுத்தமான நதிகளில் கங்கை நதியும் ஒன்று என பெயர் பெற்றுள்ளது. இங்கு டன் கணக்கில் குப்பை கொட்டப்படுகிறது. அதுமட்டுமின்றி தொழிற்சாலை கழிவுகள் இங்கு திருப்பி விடப்படுகின்றன.இமயமலையிலிருந்து சுத்தமான தண்ணீருடன் வரும் இந்த நதி பல நகரங்கள், கிராமங்களை கடந்து வரும் போது மாசடைகிறது. 1,570 மைல் தூரத்திற்கு பாயும் இந்த நதியில், 4,800 மில்லியன் லிட்டர் கழிவு நீர் கலக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. இந்த நதியை சுத்தப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி கங்கை துய்மை திட்டம் தொடர்பான வழக்கில் 543 பக்க தீர்ப்பை வழங்கி உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் அவை முறையாக அமல் படுத்தப்படுவதை கண்காணிக்க சிறப்பு குழு ஒன்றையும் அமைத்து உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி கங்கை நதிக்கரையோரத்தில் உள்ள மலைப்பகுதிகள் மற்றும் கிளை நதிகளில் நடக்கும் மத ரீதியிலான நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
பசுமை தீர்ப்பாயம் உத்தரவு: கங்கை நதியில் குப்பை கொட்டினால் ரூ.50 ஆயிரம் அபராதம் !
Reviewed by Admin
on
July 13, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.