சோர்வாக இருந்தால் உடனே உறங்கிவிடுவோம். அதுவே மனம் சோர்வாக இருந்தால் உறக்கமே வராது. நல்ல உறக்கம் வேண்டும் வேனில் மனதை சோர்வின்றி சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். எவன் ஒருவன் நல்ல உறக்கம் பெறுகிறானோ? அவனே உலகில் சிறந்த பாக்கியசாலி.
நல்ல உறக்கம், நல்ல ஆரோக்கியத்தின் முதல் அறிகுறி. இதோ! உறக்கத்தை உங்களுக்கு பரிசளிக்கும் சூப்பர் 5 கை வைத்தியங்கள்...
சின்ன வெங்காயத்தை நீரில் உப்புப் போட்டு வேக வைத்து. நன்கு வெந்த பிறகு அந்த நீரை வெள்ளை சாதத்துடன் சேர்த்து இரவு பிணைந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் பெறலாம்.
திப்பிலி வேர் பொடி ஒரு ஸ்பூன் எடுத்து மிதமான அளவில் சூடு செய்த பாலுடன் சேர்த்து, உடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்து குடித்து வந்தால் நல்ல உறக்கம் வரும். இதை படுக்கும் முன் குடிக்க வேண்டும்.
பாகற்காய் சாற்றை நல்லெண்ணையில் கலந்து உறங்கும் முன்னர் உச்சந்தலையில் தேய்த்து படுத்தால் நல்ல உறக்கம் பெறலாம்.
வேப்பமர இலைகளை வறுத்து சூடோடு தலையில் வைத்து வந்தால் நல்ல உறக்கம் பெறலாம்.
சர்பகந்தா எனும் செடியின் வேரை பொடியாக்கி, அதனுடன் ஏலக்காய் பொடி சேர்த்து காலை, இரவு இருவேளை பாலுடன் சேர்த்து குடித்து வந்தால் நிம்மதியான உறக்கம் பெறலாம்.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.