July 17, 2017
மொத்தம் 4 பேர் பலி ? சொத்திற்காக சிறுமிகளை எரித்துக் கொன்ற கொடூரம் !
பாட்னா: சொத்திற்காக சிறுமிகள் உட்பட 4 பேர் எரித்துக் கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.
பீகார் மாநிலம் கதிகார் மாவட்டம் கவுண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மனோஜ்குமார் மற்றும் அவரது தம்பி கேதர் சிங். இவர்களுக்கு இடையே சொத்து பிரச்னையால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்றிரவு கேதர் சிங் தனது குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவு அவர்களது வீடு தீப்பற்றி எரிந்துள்ளது.
இதையறிந்த தனியறையில் படுத்திருந்த கேதர் சிங்கின் மகன் லக்ஷண்குமார் சிங்(12), வெளியே ஓடி வந்துள்ளார். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் தீவிபத்தில் கேதர் சிங்கின் மனைவி பிரதிமா தேவி, மகள் சோனி குமாரி, டிம்பிள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கேதர் சிங்கும் பலியானார். இதுகுறித்து லக்ஷ்மண்குமார் சிங் அளித்த புகாரின்பேரில், மனோஜை போலீசார் தேடி வருகின்றனர்.
மொத்தம் 4 பேர் பலி ? சொத்திற்காக சிறுமிகளை எரித்துக் கொன்ற கொடூரம் !
Reviewed by Admin
on
July 17, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.