July 17, 2017
4 பேர் கவலைக்கிடம்... அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் ! கொடுங்கையூர் பேக்கரி தீவிபத்து !!
கொடுங்கையூர் பேக்கரி தீவிபத்தில் சிக்கிய 4 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
கொடுங்கையூரில் உள்ள பேக்கரியில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது. இந்தத் தீ விபத்தில் தீயணைப்பு வீரர் ஏகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை வேடிக்கை பார்த்து செல்ஃபி எடுக்க அலைமோதிய போதும் சிலிண்டர் வெடித்து சிதறியதால் 47 பேர் படுகாயமடைந்தனர்.
படுகாயம் அடைந்தவர்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர். இவர்களை நேரில் சென்று சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆறுதல் கூறினார்.
இந்நிலையில் விபத்து குறித்து விஜயபாஸ்கர் கூறுகையில், விபத்தில் காயமடைந்த 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. காயமடைந்தவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 20 பேரும், ஸ்டான்லி மருத்துவமனையில் 10 பேரும், அப்பல்லோ உள்ளிட்ட தனியார் மருத்துவமனையில் 10 பேரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
4 பேர் கவலைக்கிடம்... அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் ! கொடுங்கையூர் பேக்கரி தீவிபத்து !!
Reviewed by Admin
on
July 17, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 17, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.