July 15, 2017
தலைநகர் தில்லியில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு
தலைநகர் தில்லியில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மனித கழிவுகளை அகற்றும் பணியில் மனிதர்களே ஈடுபடுத்த தடை விதித்து 2013ம் ஆண்டு மத்திய அரசு சட்டம் இயற்றியுள்ளது.
இந்நிலையில் வழக்கு விசாரணை ஒன்றில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய முதல் அமர்வு, மனித கழிவுகளை மனிதர்களே அகற்றுவது மனித உரிமை மீறல் ஆகும். இதற்கு தடை விதித்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கிற்கு 2 வாரத்துக்குள் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்கவேண்டும்’ என்று உத்தரவிட்டனர். விசாரணை வருகிற ஆகஸ்டு 21-ந்தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று தில்லியின் கிட்ரோர்னி பகுதியில் செப்டிக்டோங்க் சுத்தம் செய்த 4 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தலைநகர் தில்லியில் செப்டிக் டேங்க் சுத்தம் செய்த 4 பேர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு
Reviewed by Admin
on
July 15, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 15, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.