Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2017

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி தாக்கிய பசு தீவிரவாதிகள் 4 பேர் நாக்பூரில் கைது !


மகராஷ்ராடிராவில்  மாட்டிறைச்சி எடுத்து சென்றதாக கூறி ஒருவரை கொடூரமாக தாக்கிய பசு குண்டர்கள்  4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா  மாநிலம் நாக்பூரை அடுத்துள்ள பார்சிங்கி என்ற பகுதியில் புதனன்று மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சலிம் இஸ்மாயில் ஷா என்பவரை பசு குண்டர்கள் சிலர் கொடூரமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்தனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பசு குண்டர்கள் என்று கூறி தாக்குதல் நடத்தியவர்கள், பராகர் சங்காதான் என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் எம்.எல்.ஏ ஒருவருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது. இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.