Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 1, 2017

தமிழக மீனவர்கள் 40 பேர் சிறைபிடிப்பு: ஆந்திர எல்லையில் தொடரும் பதற்றம் !


ஆந்திர எல்லையில் மீன் பிடித்த 40 தமிழக மீனவர்களை, 4 விசைப்படகுகளுடன் ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்துள்ளனர்.  சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், கடலுக்குள் தங்களது விசை படகுகளில் மீன்பிடிக்க செல்வது வழக்கம். கடந்த 22ம் தேதி ஆந்திர எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்த 300 மீனவர்களை, ஆந்திர மீனவர்கள் சிறை பிடித்தனர்.

அவர்களை மீட்டு வந்த அதிகாரிகள், அவர்களிடம் சிக்கிய தலா படகுக்கு ₹50 ஆயிரம் கொடுத்து மீட்டனர். இதை தொடர்ந்து கடந்த 25ம் தேதி 140 மீனவர்கள் 13 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். தமிழக-ஆந்திர கடல் எல்லையான கிருஷ்ணாம்பட்டினம், மண்ணூர், கிருஷ்ணாபுரம் ஆகிய கடல் பகுதியில்தான் மீன்பிடிப்பது வழக்கம். இவ்வாறு மீன்பிடிக்க சென்றவர்கள் கரை திரும்பவில்லை.

காசிமேட்டில் உள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் விசைப்படகு மீனவர் சங்கத்துக்கு, தொலைபேசியில் ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர், தமிழக மீனவர்களை சிறைபிடித்து வைத்துள்ளோம். அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 13 படகுகளுக்கும் தலா ₹2 லட்சம் தர வேண்டும் என நிபந்தனை விடுத்தனர். இதனால், காசிமேட்டில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஆந்திரம் தென்னார்பாளையம் கடல் எல்லையில் 4 விசைப்படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்த 40 மீனவர்களையும், ஆந்திர மீனவர்கள் சிறைபிடித்து சென்றுள்ளனர்.

இதை அறிந்ததும், காசிமேடு பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இதையொட்டி மீன்வளத்துறை அதிகாரிகளிடம், மீனவர்களை மீட்டு வருவது குறித்து கோரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்பேரில், மீன்வள துறை அதிகாரிகள், ஆந்திர மீனவர்களுடன் பேசி, தமிழக மீனவர்களை மீட்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.