Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 26, 2017

ஜிம்பாப்வே நாட்டில் பணம் கேட்ட பாதிரியாரை கூட்டு பலாத்காரம் செய்த 3 பெண்கள்


ஜிம்பாப்வே நாட்டில் பாதிரியார் ஒருவரை கட்டிவைத்து கற்பழித்த 3 இளம்பெண்களை அந்நாட்டு பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜிம்பாப்வே நாட்டில் உள்ள Bulawayo என்ற நகரில் தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நகரில் உள்ள தேவாலயம் ஒன்றில் பெயர் வெளியிடப்படாத பாதிரியார் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த பாதிரியாரிடம் Sandra Ncube(21), Riamuhetsi Mlauzi(23) மற்றும் Mongiwe Mpofu(25) ஆகிய 3 இளம்பெண்கள் பணம் கடனாக பெற்றுள்ளனர்.

நீண்ட நாட்களாக பணத்தை திருப்பி செலுத்தாததால் பணத்தை வாங்குவதற்காக பாதிரியார் மூவரும் தங்கியிருந்த வீட்டிற்கு சில தினங்களுக்கு முன்னர் சென்றுள்ளார்.

அப்போது, வீட்டிற்குள் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள் என மூவரும் கூறியுள்ளனர்.

மூவரின் பேச்சை நம்பிய பாதிரியார் வீட்டிற்குள் சென்றபோது மூவரும் திடீரென அவர் மீது பாய்ந்து கட்டிப்போட்டுள்ளனர்.

நடப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்த பாதிரியார் அவர்களிடம் இருந்து தப்பிக்க போராடியுள்ளார்.

மூவரில் ஒருவரான Sandra Ncube என்ற பெண் உள்ளே சென்று ஆணுறையை எடுத்து வந்துள்ளார்.

மற்ற இருவரும் பாதிரியாரை பிடித்துக்கொள்ள மூன்றாவது பெண் பாதிரியாரை கற்பழித்துள்ளார்.

மேலும், இரண்டு பெண்களும் பாதிரியாரை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக மூவரும் பொலிசாரால் கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

அப்போது, மூவரில் ஒருவர் பாதிரியாரை கற்பழித்ததை ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், மற்ற இருவரும் ஒப்புக்கொள்ளவில்லை.

இது குறித்து பெண்கள் நீதிமன்றத்தில் பேசியபோது, ‘பிற ஆண்களை போல் பாதிரியாருக்கும் பெண்கள் மீது மோகம் இருக்கும்.

இதனை நிரூபிக்க தான் நாங்கள் மூவரும் இவ்வாறு நடந்துக்கொண்டோம். நாங்கள் தொட்டதும் அவரும் எங்களது விருப்பத்திற்கு ஒத்துழைப்பு கொடுத்தார்’ என வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஆனால், பெண்களின் வாக்குமூலத்தை பாதிரியார் மறுத்துள்ளார்.

தற்போது இவ்விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்கு தொடர்பான மறுவிசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் 7-ம் திகதி வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.