Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 24, 2017

கடத்தப்பட்ட 39 இந்தியர்கள்... எந்தத் தகவலும் இல்லை என்று மத்திய அரசு கைவிரிப்பு !


ஈராக்கில் 3 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் உயிருடன் இருக்கிறார்களா என்பது உறுதிபடத் தெரியவில்லை என்று இந்த நாட்டின் வெளியுறஹவுத் துறை அமைச்சர் இப்ராஹிம் அல் ஜபாரி கூறியுள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு 39 இந்தியர்கள் ஈராக்கில் கடத்தப்பட்டதாக தகவல்க் வெளியாகின. இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற விவரம் இன்னும் தெளிவாக வெளியாகவில்லை. இவர்கள் அனைவரும் கடத்தப்பட்டு மொசூல் அருகே பாதுஷா சிறையில் அடைக்கப்பட்டதாகவும், இந்த சிறையை ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்ரவாதிகள் தகர்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் சுஷ்மா தவறான தகவல்களை தருவதாக எதிர்கட்சிகள் புகார் எழுப்பியுள்ளன.

லோக்சபாவிலும் அகாலிதளம் உள்ளிட்ட கட்சியினர் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கோரிக்கை விடுத்தன. இந்நிலையில் இந்தியா வந்துள்ள, ஈராக் வெளியுறவுத் துறை அமைச்சர் அல் ஜபாரி இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை இன்று டெல்லியில் சந்தித்தார். அப்போது கடத்தப்பட்ட இந்தியர்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இந்த சந்திப்பிற்குப் பின் செய்தியாளர்களிடம் இப்ரராஹிம் கூறியதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், 39 இந்தியர்கள் குறித்து எந்த உறுதியான தகவலும் இல்லை. காணாமல் போன 39 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டனரா என்று எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று இப்ராஹிம் அல் ஜபாரி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.