July 25, 2017
2வது நாளாக அறந்தாங்கி அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்: கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு !
கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக அறந்தாங்கி அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராகவும் கதிராமங்லத்தில் ஓஎன்ஜிசி திட்டத்துக்கு எதிராகவும் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பல்வேறு கல்லூரி மாணவர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக மாதிரிக் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் இருநேரக் கல்லூரி மாணவர்களும் இரண்டாம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெடுவாசல் மற்றும் கதிராமங்கலம் கிராம மக்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
2வது நாளாக அறந்தாங்கி அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்: கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு !
Reviewed by Admin
on
July 25, 2017
Rating: 5
Reviewed by Admin
on
July 25, 2017
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.